“ பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்றான் பாரதி. கோயில் கட்டிய இடத்தில் எல்லாப் பள்ளியும் சோ்த்துக் கட்டிய பெருமைக்குரியவர்கள் கிறித்துவ சமயக்குருமார்கள். ஏனெனில் ஒரு மனிதனை மாண்புள்ளவனாக்குவது கல்வி. கல்வியே என்றும் அழியாத செல்வம். கல்வி கொடுப்பதன் மூலம் மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள் குருமார்கள்.
                                    முதுகுளத்தூர் வட்டாரம் திருவரங்கம் பகுதி, வேளாண்மைத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மக்கள், இப்பகுதியில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் பள்ளிக்கூடம் எதுவும் இல்லை என்பதால் , கல்வி இப்பகுதி மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. இந்நிலை கண்டு மனம் வருந்தினார். அன்றைய இருதயக் கோவில் பங்குத்தந்தை சிந்தனைச் சிற்பி அமரர், மேதகு சி.ம.விசுவாசம் ஆண்டகை அவர்கள்.
                                    அவரது பெருமுயற்சியின் பயனாக, மதுரைப் பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அருளாசியோடு “ உண்மையை அன்பினில் ஆற்றுவோம்” எனும் விருதுவாக்கோடு உலக மீட்பர் இயேசுவின் திருஇருதயத்தைப் பெயராகக் கொண்டு திரு இருதய உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. உயர்கல்வி பெற வழியில்லை எனும் துயர் இதனால் மறைந்தது இவ்வாட்டார மக்கள் கல்லார் எனும் உயர்நிலை அடையத் தொடங்கினார்.
எழுத்தறியத் தீருமன்றோ இழிதகைமை